நாளை முதல் கொஞ்சம் ஊரடங்கு தளர்த்தப்பட இருக்கிறது
நம் அன்றாட பணிகளை விரைவில் துவங்கப் போகிறோம், இந்த 40 நாள் இழப்பு, அனுபவம், தோன்றிய சிந்தனைகள் இன்றைய வாழும் தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.
இன்று 100 வயதை தொட்டவர்கள் கூட தங்கள் வாழ்நாளில் பார்த்திராத ஒரு அபூர்வ நிகழ்வு இந்த பாதிப்பு, நமக்கும் இது ஓர் புதிய அனுபவம்
*இனி நாளை என்ன செய்ய வேண்டும்?
1. நீங்கள் அனைவரும் நிச்சயம் வேலைக்கு செல்லத்தான் வேண்டும், குடும்பத்துக்காக வருமானம் ஈட்ட வேண்டும். இன்று முதல் ஒரு வருடத்திற்கு சிக்கனமாக இருக்கவும், தேவையற்றவைகளுக்கு செலவு செய்யவும் வேண்டாம்.
2. கூடிய வரையில் சிறு வியாபாரிகள் கடைகளில் மட்டுமே அனைத்து மளிகை, காய்கறி பொருள்களை வாங்குங்கள். மால் மற்றும் சூப்பர்மார்கெட்களை தவிர்த்து விடுங்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு உணவுப்பொருள் வழங்கிய மகான்கள் இவர்கள் தான்
3. Amazon /flip cart போன்ற online நிறுவனங்கள் செய்தித்தாள்களில் 5 அல்லது 6 பக்கங்களை ஆக்கிரமித்து விளம்பரம் கொடுத்தார்கள் வியாபாரத்தை பெருக்கினார்கள் ஊரடங்கு சமயத்தில் எல்லாம் காணாமல் போனார்கள் ஒரு வருடத்திற்கு நாம் அவர்களைத் தவிர்த்தால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள். நமக்கு தேவையே இல்லை அவர்கள்
4. நகைக் கடைகளை இப்போதைக்கு புறக்கணியுங்கள் இன்று சவரன் 35,000 ரூபாய்களைத் தாண்டி உள்ளது. ஒரு கிராம் வாங்க வேண்டும் என்றால் கூட நீங்கள் புற்றீசல் போல நகைக் கடைகளை ஆக்கிரமித்தால் லாபம் நகை கடைக்காரர்களுக்கே. இந்த 2 மாத நஷ்டக் கணக்கை உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடத்திற்கு நீங்கள் நகைகள் வாங்கவில்லை என்றால் ஊரில் பாதி நகைக்கடைகள் காணாமல் போய் விடும்.
5. அடுத்து திரை அரங்குகளை புறக்கணியுங்கள். எந்த ஹீரோவும் இன்று நமக்கு ஒரு சிறு நன்மை கூடச் செய்யவில்லை. இந்த ஊரடங்கு முடிந்த நேரத்தில். மனைவியின் தாலியை அடமானம் வைத்து ஹீரோவின் 70 அடி cut out வைக்க வேண்டாம். அதற்குப் பால் ஊற்றவும் வேண்டாம். ஏன் என்றால் அந்தத் தகுதி அவர்களுக்கு இல்லை. 2000 ரூபாய் கொடுத்து “பிடித்த நாயகன்” படத்தை டிக்கட் எடுத்து முதல் ஷோ பார்ப்பதினால் உங்கள் குடும்பங்களில் ஒன்றும் மங்களம் பெறப் போவதில்லை. ஒரு மூன்று மாதங்கள் பொறுங்கள் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்த சில நாட்களே ஆன படம் என்று தொலைக்காட்சிகளில் நீங்கள் காணலாம்.
20,000 ரூபாய்க்கு 48″ டி.வி கிடைக்கிறது, அதில் வீட்டில் குடும்பத்தோடு தியேட்டரில் பார்பது போல் படம் பார்கலாம்
6. டாஸ்மாக் குடிமகன்களுக்கு.. இந்த 2 மாதம் “Rehabilitation Center” செல்லாமல் குடியை நிறுத்திய இந்த ஊரடங்கிற்கு நன்றி சொல்லுங்கள். தலை வணங்குங்கள், படிப்படியாக குடியை நிறுத்தி உங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.
7. வாகனம் மற்றும் கார் வாங்குவதை அறவே தவிர்த்து விடுங்கள். ஏன் அரசாங்கம் விதித்த BS 4 வாகனங்கள் நிறைய உள்ளன. அதை விற்பதற்கு வாகன உற்பத்தியாளர்கள் நீதிமன்றம் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ discount என்கிற பெயரில் RTO ஆபீஸ் மூலமாக உங்கள் தலையில் கட்டி விடுவார்கள் ஜாக்கிரதை. அவர்களைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில் zero inventory Management என்கிற கொள்கையில் BS 4 வாகனங்களை கழித்துக் கட்டி விடுவார்கள் நீங்கள் ஏமாற வேண்டாம். அவசரம் வேண்டாம்
நம் நாட்டில் விரைவில் பேட்டரி கார்கள் வலம்வர இருக்கின்றது. வெளிநாடுகளில் இன்று பேட்டரி கார்கள் தான் ஓடுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஓட்டுனர் இல்லாத கார்கள் வலம் வர ஆரம்பித்துவிட்டது.
8. 35000 ரூபாய் பெறுமான AC இன்று 10000 ரூபாய்க்கு விற்பனை என்று கூவிக் கூவி விற்பார்கள். இதனால் நஷ்டம் நமக்கே. ஏன் என்றால் Quality Compromise strategy will be adopted. அதே போல சீனாவில் இருந்து வரும் மொபைல் போன்றவைகளை online shop மூலமாக ஏகப்பட்ட discount கொடுத்து உங்கள் கைகளை அரிப்பு எடுக்கச் செய்வார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடம் மொபைல் வாங்கவில்லை என்றால் நமது குடி முழுகிப் போயிடாது.
9. இந்த இக்கட்டான (மறு பிறவி) காலத்தில் நமக்காக உழைத்த அரசு மற்றும் ஆட்சியாளர்கள், டாக்டர்கள், காவல் துறையினர், இதர அதிகாரிகள், துப்பரவு பணியாளர்கள், உணவுப் பொருள் அளித்தவர்கள் என அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்
10. மக்களே வாழ்விற்கு இது தேவை என்கிற நிலை வந்தால் மட்டுமே அந்தப் பொருள்களை வாங்குங்கள். அகலக்கால் அல்லது ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நிரந்தர கடன்காரனாக அல்லது குடிகாரனாக மாறி விடாதீர்கள்.
11. கடன் அட்டை (Credit Card ) உபயோகத்தை கூடிய அளவு தவிர்த்து விடுங்கள். வரவு எட்டணா செலவு பத்தணா என்கிற பாடல்களை நினைவு கொள்ளுங்கள்.
12.குழந்தைகளே தயவு செய்து உங்கள் பெற்றோர்களை வருத்தாதீர்கள். என் friend I Phone 12 லேட்டஸ்ட் மாடல் வைத்து இருக்கிறான் அதே போல எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். விரலுக்கு தகுந்த வீக்கம் வேண்டும்.
13. முடிந்த அளவு வெளிநாட்டு பொருட்களை வாங்குவதை தவிர்த்திடுங்கள், அதிலும் சீன பொருள் வேண்டவே வேண்டாம்.
14. இப்பொழுது இந்த ஒரு மாதத்தில் உங்களுக்கு தெரிந்து இருக்கும், எது அத்தியாவசியம், எது அவசியம், எது தேவையில்லை என்று… அத்தியாவசிய தேவையை மட்டும் பூர்த்தி செய்து, கொஞ்சமாவது தங்கள் தகுதிக்கு ஏற்ப சேமிப்பு வைத்துக் கொள்ளுங்கள். பணத்தின் அருமை இப்போது தெரிந்து இருக்கும்
15. இன்னும் ஒரு ஆண்டு நமக்கு சோதனையான காலம். அதைக் கடந்து விட்டால் இன்று புறநகரில் 70 லட்சம் விற்கும் வீடு 50 லட்சத்திற்கு வந்து விடும் பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஒரு வருட பொறுமை உங்களை 20 லட்சம் வரை சேமிப்பிற்கு வழி வகுத்து இருக்கிறது. அதே போல தங்கம் விலையும் நீங்கள் ஒரு வருடம் வாங்க வில்லை என்றால் அடுத்த வருடம் பாதி விலையில் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தயவு செய்து காத்திருக்கவும்.
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்கிற எம்ஜிஆர்-ன் பாடல் வரிகள் இன்னும் ஒரு வருடத்திற்கு நமக்குத் என்ன மட்டும் தேவை என்பதை மறந்து விடாதீர்கள்.
சிக்கனமும் சேமிப்பும் நமக்கு சோறு போடும். ஊதாரித்தனம் நமது வம்சத்தை அழித்து விடும்… ஜாக்கிரதை.
கலியுகத்தின் கொடுமைகளை இன்னும் ஒரு வருடம் நாம் கண் முன்னே காணப் போகிறோம் முன் எச்சரிக்கை செய்து உள்ள பதிவு இது.
விலை உயர்ந்த நகைகளையோ அல்லது வேறு ஏதாவதோ போட்டுக் கொண்டு சாலையில் செல்ல வேண்டாம். ஏன் என்றால் திருடர்கள் அதிகம் களம் காண இருக்கும் நேரம் இது, இப்போது பண பஞ்சத்தின் கொடுமையான இந்த நேரத்தில் நமது நாட்டில் உள்ள சட்டத்தை திருடர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு திருட்டுச் செயலில் அல்லது அதை விட கொடுமையான செயல்களில் ஈடுபடுவார்கள். 1000 ரூபாய்க்காக கொலை செய்யும் கயவர்களும் உண்டு இந்த நாட்டிலே.
கவனம் முக்கியம்