சென்னையில் கொரோனா பாதிப்பு 4371 ஆக உயர்வு ; மண்டல வாரியாக விவரம்

Spread the love

பெருநகர சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. மண்டலவாரியாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் விவரம் வருமாறு:-

சென்னை

சென்னையில் கொரோனா மையமாக திகழும் ராயபுரத்தில் பாதிப்பு 742ஆக அதிகரித்துள்ளது. 15 மண்டலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 371ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரத்துக்கு அடுத்துகோடம்பாக்கம் மண்டலத்தில் 713 பேரும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 590 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு மண்டலங்களிலும் 743 பேர் குணமடைந்து உள்ள நிலையில் 32 பேர் பலியாகியுள்ளனர். சென்னையின் பல்வேறு மருத்துவமனைகளில் 3 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோரே மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னையில் கொரோனா பாதித்தோரில் 62 புள்ளி 14 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர். எஞ்சியோரில் 37 புள்ளி 83 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.

திருவெற்றியூர்- 98

மணலி – 50

மாதவரம் – 65

தண்டையார்பேட்டை – 327

ராயபுரம் – 742

திரு.வி.க நகர் – 590

அம்பத்தூர் – 224

அண்ணா நகர் – 349

தேனாம்பேட்டை – 458

கோடம்பாக்கம் – 713

வளசரவாக்கம் – 379

ஆலந்தூர்- 46

அடையாறு – 212

பெருங்குடி – 51

சோழிங்கநல்லூர்- 52

மற்றமாவட்டங்கள் – 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page