அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு எண்ணிக்கையை விட அதிகமான மக்களைக் பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்து உள்ளது.
நியூயார்க்
நியூயார்க் மாநிலத்தில் 3,37,055 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளன, 26,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால் பலியாகி உள்ளனர். நியூயார்க் நகரில் மட்டும் 1,83,662 பாதிப்புகளும் 14,928 இறப்புகளும் பதிவாகி உள்ளன.
நியூயார்க் நகரில் பொதுவாக சூடான வசந்த நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அல்லது அலுவலக ஊழியர்கள் ஓய்வு எடுக்கும் பிஸியான டைம்ஸ் சதுக்கத்திற்கு அருகிலுள்ள பூங்கா அமைதியான நிலைக்கு வந்துவிட்டது, அதேபோல் 80 லட்டத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் முழு நகரமும் கடந்த காலங்களில் பெரும்பாலும் இரண்டு மாதங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரம் ஜூன் வரை மூடப்பட மேயர் பில் டி பிளேசியோ பரிந்துரைத்துள்ளார், நியூயார்க் மாநிலத்தின் மூன்று பகுதிகள் மே 15 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளன.
கொரோனா வைரஸ் நியூயார்க் நகரத்தை அழித்து நிலைகுலைய வைத்து உள்ளது. குறைந்தது 15 000 பேரின் உயிரை பறித்து உள்ளது, அதன் பொருளாதாரத்தை சிதைத்து லட்சக்கணக்கானவர்களை வேலையிழக்க செய்து உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு எண்ணிக்கையை விட அதிகமான மக்களைக் பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அதிகப்படியான இறப்புகளை குறித்து ஆய்வு செய்தது மற்றும் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மார்ச் நடுப்பகுதியில் இருந்து அதிகப்படியாக 24,172 பேர் இறந்ததைக் கண்டறிந்தது.இவற்றில் சுமார் 19,000 உறுதியான கொரோனா வைரஸ் மரணங்கள் ஆகும்.
ஆனால் நகரத்தின் அதிகப்படியான இறப்புகளில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுடன் வெளிப்படையான தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்று நியூயார்க் சுகாதார மற்றும் மன சுகாதாரத் துறையின் டொனால்ட் ஓல்சன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது
அந்த மரணங்கள் ஏன் நிகழ்ந்தன என்பதை சரியாக அறிவது கடினம். ஆனால் இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற அடிப்படை நிலைமைகளைக் கொண்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், இத்தகைய மரணங்களுக்கு கொரோனா நேரடியான காரணம் அல்ல என ஓல்சனின் குழு குறிப்பிட்டுள்ளனர்.
கூடுதலாக, சமூக இடைவெளி நடைமுறைகள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பரமாரிப்புக்கான தேவை மற்றும் கொரோனா தொடர்பான பொது பயம் ஆகியவை உயிர்காக்கும் கவனிப்பைப் பெறுவதில் தாமதத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் தெரிவிக்கப்பட்ட மாரடைப்பு மற்றும் பக்கவாதம் குறைந்து வருவது மக்கள் அவசர பிரிவுகளைத் தவிர்ப்பதன் விளைவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.