கொரோனா தொற்றால் உலகளவில் மக்கள் உளவியல் ரீதியிலான துன்பத்தை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஜெனீவா
அன்புக்குரியவர்களை இழந்ததற்கு வருத்தம்… வேலை இழப்பால் அதிர்ச்சி… தனிமைப்படுத்தல்…கடினமான குடும்ப இயக்கவியல் எதிர்காலத்திற்கான நிச்சயமற்ற தன்மை மற்றும் பயம்… என மருத்துவ, சுகாதார பணியாளர்களில் தொடங்கி, வேலை இழந்தவர்கள், தனிமையில் தவிக்கும் முதியவர்கள், இளைஞர்கள் என பலரும் மிகுந்த மன அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நாடுகள், சமூக மற்றும் மனரீதியாக மக்களுக்கு எவ்வாறு ஆதரவு கொடுப்பது என்பதையும் சிந்திக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
முன்னணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள், முன்பே இருக்கும் மனநல நிலைமைகளைக் கொண்டவர்கள் மற்றும் மோதல் மற்றும் நெருக்கடியில் சிக்கியவர்கள் அதிகம் ஆபத்தில் உள்ளனர். நாம் அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என ஐநா கூறி உள்ளது.