நாடார்கள் தொடர்ந்து புறக்கணிப்பு தொடர்ந்தால்,அரசியல் நஷ்டம் எங்களுக்கில்லை. ர.சதீஷ்மோகன்.

Spread the love

சில வாரங்களுக்கு முன்பு வரை,பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரையும் சேர்த்து ஒன்பது பேர் முக்குலத்திற்கு!
தமிழகத்தில் எண்ணிக்கையில் 2வது பெரிய சாதியான என் நாடார் குலத்திற்கு ஒன்றே ஒன்று.அதுவும் உப்பு,சப்பற்ற இலாகா!
சமூக நீதி புரவலர் WPA சவுந்திரபாண்டியனார் வழித்தோன்றல்கள் மீது ஏனிந்த அநீதி?
முதல்வருக்கும்,
துணை முதல்வருக்கும் நாடார்கள் மீதென்ன துவேஷம்?!
தமிழகத்தில் கணிசமான எண்ணிக்கையிலுள்ள வன்னியர்களுக்கும் மக்கட்தொகை விகிதாச்சாரப்படி மந்திரிகளின் எண்ணிக்கை கொடுக்கவில்லை.
குறிப்பிட்ட ஒரு சாதிக்கு மட்டும் வாரி வழங்கியதில் என்ன ஆனந்தமோ கழக ஒருங்கிணைப்பாளருக்கும்,இணை ஒருங்கிணைப்பாளருக்கும்?!
யாரை திருப்தி படுத்த நாடார் இனம் பழிவாங்கப்படுகிறது?
வான் பொய்த்தாலும்,தான் பொய்க்காமல் விசுவாச உழைப்பை பொழிபவன் நாடார்.
2004 எம்.பி.,2006 சட்டமன்ற தேர்தல்களில் ஒரு சம்பவத்திற்காக அதிமுகவிற்கு எதிராக வாக்களித்து தன் கோபத்தீயை வெளிக்காட்டியவன் நாடார்!
நாடார்கள் புறக்கணிப்பு தொடர்ந்தால்,வரும் தேர்தலில் உங்களை புறக்கணிக்க தயங்க மாட்டான் என்பதை பெரியாரின் வழித்தோன்றல்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
நாடார்கள் யாசகம் கேட்கவில்லை,வாக்களித்த உரிமையில் கேட்கிறோம்!
சமூக நீதியில் சமநிலை வேண்டும் என கேட்கிறோம்.
வாக்களித்த உரிமை எமக்குண்டு, கேட்கிறோம்!
கொடுக்கும் கடமை உங்களுக்குமுண்டு,
கொடுங்கள்.
நாடார்களுக்கு மந்திரிசபையில் உரிய பிரதிநிதித்துவம் கொடுங்கள்
வரும் தேர்தலில் அவன் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பான்
சங்கு ஊதி கொண்டே இருப்பான்,நாம் காது கேளாதவர் போல் கடந்து செல்லலாம் என தப்புக்கணக்கு போட்டு ஏமாந்து விடாதீர்கள் என முதல்வர்,துணை-முதல்வர்களை கேட்டு கொள்கிறேன்.புறக்கணிப்பு தொடர்ந்தால்,அரசியல் நஷ்டம் எங்களுக்கில்லை.
ர.சதீஷ்மோகன் பதிவு.

ர.சதீஷ்மோகன் பதிவிற்கு மும்பை ராஜா சிங் நாடார் பதிவு

சமூகநீதி சதிராடுகிறது தமிழக அமைச்சரவை பட்டியலில்.

தமிழக அமைச்சரவை 31 பேர்

கொங்கு வெள்ளாள கவுண்டர் : (6)
1.எடப்பாடி பழனிச்சாமி – சேலம்
2.செங்கோட்டையன் – ஈரோடு
3.தங்கமணி – நாமக்கல்
4.வேலுமணி – கோவை
5.கே.சி.கருப்பணன் – ஈரோடு
6.விஜயபாஸ்கர் – கரூர்

வன்னியர் : (5)
1.வீரமணி – வேலூர்
2.சம்பத் – கடலூர்
3.சண்முகம் – விழுப்புரம்
4.துரைக்கண்ணு – தஞ்சாவூர்
5.அன்பழகன் – தருமபுரி

முக்குலத்தோர்:(8)
1.காமராஜ் (திருவாரூர்)
2.விஜயபாஸ்ர் (புதுக்கோட்டை)
3.பாஸ்கரன் (சிவகங்கை)

4.பன்னீர்செல்வம் – தேனி
5.உதயகுமார் – மதுரை

6.செல்லூர் இராஜு – மதுரை
7.சீனிவாசன் – திண்டுக்கல்
8.மணியன்-நாகை
ஆசாரி : 1
1.இராஜேந்திர பாலாஜி – விருதுநகர்

நாயுடு : 1
1.கடம்பூர் இராஜூ – தூத்துக்குடி

நாடார் : 1
1.பாண்டியராஜன் – திருவள்ளூர்

முத்தரையர் : 1
1.வளர்மதி – திருச்சி

செட்டியார் : 1
1.இராதாகிருஷ்ணன் – திருப்பூர்

செங்குந்தர் : 1
1.சேவூர் இராமச்சந்திரன் – திருவண்ணாமலை

வெள்ளாளர் : 1
1.வெல்லமண்டி நடராஜன் – திருச்சி

மீனவர் : 1
1.ஜெயக்குமார் – சென்னை

கிறித்தவர் : 1
1.பெஞ்சமின் – சென்னை

இஸ்லாமியர் : 1
1.நிலோபர் கபில் – வேலூர்

பள்ளர் : 1
1.இராஜலட்சுமி – நெல்லை

பறையர் : 1
1.சரோஜா – நாமக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page