கேரளாவில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று
திருவனந்தபுரம்:
கேரளாவில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய 26 பேருடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.