காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,637 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ள நிலையில் 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.