வெங்காயம், தக்காளி, பருப்புகள், போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கம்- நிதி அமைச்சர்

Spread the love

கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்துக்காக ரூ. 13, 343 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
1 லட்சம் கோடி ரூபாய் வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும்
மீண்டும் பிரதமரின் கிசன் சம்பட யோஜன திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் துவங்கப்பட உள்ளன
கடல் சார்ந்த மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 11,000 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளன
இதன் காரணமாக ஏராளமானோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்
மார்ச் 31ஆம் தேதியுடன் காலாவதியாகும் இறால் பண்ணைகளுக்கான பதிவு 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த அனைத்து விதமான கால்நடைகளுக்கும் 100% தடுப்பு மருந்து இடப்படும்
53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்
5.60 லட்சம் லிட்டர் பால் கூட்டுறவு சங்கங்களால் கொள்முதல் செய்யப்பட்டது – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஒரு நாளைக்கு 560 லட்சம் லிட்டர் பால் சராசரியாக உற்பத்தி செய்யப்படுகிறது
கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்துக்காக ரூ.13, 343 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பால் உற்பத்தி துறையில் சுமார் 15 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளன.
மீன் வளத்துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
மூலிகை பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
விவசாய பொருட்களை சர்வதேச அளவில் விளம்பர படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
தேனி வளர்ப்பு திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
புதிய திட்டத்தின் கீழ் 2 லட்சம் தேன் உற்பத்தியாளர்கள் பலன் அடைவார்கள்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தற்போது தக்காளி, வெங்காயம், உருளைக்கு வழங்கப்படும் போக்குவரத்து மானியம் அனைத்து காய்கறிகள் பழங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
வெங்காயம், பருப்பு வகைகள் போன்றவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றன. சில எண்ணெய் வகைகளும் இதில் அடங்கும்.

மேற்கண்ட இந்த பொருட்கள் இருப்புகளுக்கான அதிகபட்ச வரம்பு தளர்த்தப்படும்.
இதன் காரணமாக விவசாயிகள் விளை பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்து லாபம் ஈட்ட முடியும்
இந்த சட்டம் இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்ட போது பொருட்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு வைத்திருப்பதற்காக இயற்றப்பட்டது.
மாநிலங்களுக்கு இடையேயான விளைபொருட்களின் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்.
தேசிய பேரிடர் உள்ளிட்ட சிலை குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே இந்த பொருட்களில் அதிகபட்ச இருப்புக்கான கட்டுப்பாடு விதிக்கப்படும்.
வெங்காயம், தக்காளி, பருப்புகள், போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page