50 சதவீத ஊழியர்களுடன் 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு

Spread the love

மே.18 முதல் அரசு அலுவலகங்கள் 50 % ஊழியர்களுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

வரும் திங்கள் கிழமை ( மே 18) முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வாரத்தின் ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். அலுவலகம் பணிக்கு வராத ஊழியர்கள் மின்னணு முறையில் தொடர்பில் இருக்க வேண்டும். தேவையான போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page