நாங்கள் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
வாஷிங்டன்
கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவில் தோன்றை கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை சீனாவை விட இந்தியா கடந்துவிட்டது, 85,215 கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்துள்ளதாக இந்திய சுகாதார துறைகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புகளின் அடிப்படையில் இந்தியா இப்போது உலகில் 11 வது இடத்தில் உள்ளது.
இருப்பினும், இந்தியாவின் இறப்பு விகிதம் 5.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது சீனாவை விட 3.2 சதவீதமாக உள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் 27,000 க்கும் மேற்பட்டோர் மீண்டு வந்துள்ளனர்.
உலகெங்கிலும், கொரோனா வைரசால் 44 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பாதிப்புகளை அமெரிக்கா தெரிவித்துள்ளது – இதுவரை இல்லாத அளவுக்கு இந்த கொடிய நோயால் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகியவை தலா 2 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளுடன் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்று நம்புகிறோம்”ஆபரேஷன் வார்ப் ஸ்பீடு” என்ற திட்டத்தின் கீழ் இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறோம். இதற்காக ஒரு முன்னாள் மருந்து நிர்வாகியை நியமிப்பதாக அறிவித்தார்.
இந்திய-அமெரிக்கர்களை “சிறந்த” விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என்று டிரம்ப் புகழ்ந்தார்.
மேலும் அவர் கூறும் போது “நான் சமீபத்தில் இந்தியாவிற்கு சென்று திரும்பி வந்தேன், நாங்கள் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், அமெரிக்காவில் எங்களுக்கு மிகப்பெரிய இந்திய மக்கள் தொகை உள்ளது,
இந்தியா மிகவும் சிறப்பானது, பிரதமர் மோடி என்னுடைய நல்ல நண்பராக உள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும் என கூறினார்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதியில் இந்தியா தனது பிடியை தளர்த்தாவிட்டால், பதிலடி கொடுப்பதாக அவர் சுட்டிக்காட்டிய ஒரு மாதத்திற்குப் பிறகு டிரம்ப் பாராட்டி உள்ளார்.