பெண்களை விட ஆண்களையே அதிகம் தாக்கும் 6 கொடிய நோய்கள்

Spread the love

பெண்களை விட ஆண்களையே அதிகம் தாக்கும் 6 கொடிய நோய்கள் இவைதான்…

ஆண்களுக்கு உடல் வலிமை இருந்தால் கூட அவர்கள் சில நோய்களுக்கு உள்ளாகின்றனர். இதய நோய்கள், சர்க்கரை நோய்கள் போன்ற நோய்கள் பெண்களை விட ஆண்களையே அதிகம் தாக்குகிறது. அப்படி எந்தெந்த நோய்கள் ஆண்களை தாக்குகிறது வாங்க தெரிஞ்சுக்கலாம்

ஆண்கள் பெண்களை காட்டிலும் உடல் வலிமை அதிகமாக கொண்டு இருந்தால் கூட சில நோய்கள் குறிப்பாக ஆண்களை மட்டும் தாக்குகிறது. பெரும்பாலான ஆண்களை மட்டும் குறி வைத்து சில நோய்கள் தாக்குவது உண்டு என்று மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர். எனவே ஆண்கள் இரட்டிப்பு விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் இந்த நோய்கள் சூப்பர் மேனாக இருக்கும் ஆண்களைக் கூட பலவீனமாக்கி விடுவது உண்டு. இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் ஆண்களுக்கே இந்த பாதிப்புகளை பற்றி தெரியாமல் இருப்பது தான். வருகின்ற நோய்களை நீங்கள் ஆரம்பத்திலேயே கண்டறியாவிட்டால் கண்டிப்பாக உங்க உடல்நலத்தில் பெரிய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள் .

​ஆண்களை குறிவைக்கும் நோய்கள்

ஆண்களுக்கு உடல் வலிமை இருந்தால் கூட பெண்களைப் போன்று அவர்களுக்கு மன வலிமை இருப்பதில்லை. இதனால் என்னவோ ஆண்கள் சீக்கிரமே இதய நோய்கள், சர்க்கரை நோய்கள் என்று பல வித நோய்களுக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலான ஆண்களை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் 50 வயதை அடைந்த உடன் ஆண்கள் இதய நோய்கள் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்சனை குறித்து கவலை கொள்ளத் தொடங்கி விடுகிறார்கள்.

60 வயதை அடைந்த ஆண்கள் தங்களுக்கு புரோஸ்டேட் மற்றும் டிமென்ஷியா ஆபத்து இருப்பதாக உணர்கிறார்கள். இத்தகைய பாதிப்புகளை கொண்ட ஆண்களுக்கு மனதில் சீக்கிரமே பயம் குடி கொள்ளத் துவங்கி விடுகிறது. எனவே ஆண்கள் தங்களை தாக்கும் நோய்கள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும். அதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அவர்கள் செய்து கொள்வது நல்லது. அதற்கு முதலில் ஆண்களை தாக்கும் 6 விதமான நோய்களை பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

​இதய நோய்கள்

உங்க குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருக்கலாம். அதே மாதிரி உங்களுக்கும் இரத்த அழுத்தமோ அல்லது கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்போ இருந்தால் மருத்துவரை நாடி சிகச்சை பெறுங்கள். ஏனெனில் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. எனவே நீங்கள் உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் இதய நோய்கள் பெரும் ஆபத்தாக முடிவதை தடுக்க முடியும். உங்க மருத்துவர் அதற்கான சிகிச்சைகளையும், மருந்துகளையும் உங்களுக்கு பரிந்துரைப்பார்.

​டயாபெட்டீஸ்

பாகிஸ்தான் போன்ற நாடுகளில் 4 ஆண்களில் ஒருவருக்கு டயாபெட்டீஸ் நோய் இருக்கிறது. காரணம் தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் எல்லாரிடமும் டயாபெட்டீஸ் நோயை கொண்டு செல்கிறது. குறிப்பாக இந்த டயாபெட்டீஸ் நோயால் ஆண்கள் அதிகளவு பாதிப்படைகின்றனர். அதுமட்டுமல்லாமல் கண் நோய்கள், இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட நீரிழிவு நோய் தான் மூல காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் நீரிழிவு நோய் ஒரு சைலண்ட் கில்லர் மாதிரி செயல்பட்டு உடம்பில் உள்ள பல்வேறு உறுப்புகளை சேதப்படுத்துகிறது.

எனவே நீங்கள் நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டத்திலயே சிகச்சை பெறுங்கள். நீங்கள் சுறுசுறுப்பாக இருந்தால் இந்த நோயிலிருந்து உங்களை காப்பாற்ற முடியும். எடை பராமரிப்பு, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, புகைப்பிடித்தலை தவிர்ப்பது போன்ற செயல்களால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே நீரிழிவு நோய் ஆண்களை அதிகளவு தாக்கும் அபாயம் இருப்பதால் ஆண்கள் விழிப்புணர்வோடு செயல்படுவது நல்லது.

​பக்கவாதம்

கைகள், கால்கள் மற்றும் முகத்தின் உணர்வின்மை, பேச்சைப் புரிந்து கொள்வதில் சிக்கல்கள், கண்களின் பலவீனம், தலைவலி, நடப்பதில் சிரமம், பலவீனம் மற்றும் அமைதி இல்லாமை ஆகியவை பக்கவாதத்தின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை நாம் முன்னரே அறிந்து கொள்வதன் மூலம் நாம் பக்கவாதத்தை போக்க முடியும். ஏனெனில் இந்த பக்கவாதமும் ஆண்களை அதிகளவில் தாக்குகின்றன. எனவே இந்த அறிகுறிகள் உங்களுக்கு உடனே தென்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

​உடல் எடை பராமரிப்பு

ஆண்களுக்கு வயதாகும் போது அவர்களுடைய வளர்ச்சிதை மாற்றமும் குறைகிறது. இதனால் அவர்கள் அதிக உடல் எடையை பெறுகின்றனர். இந்த உடல் பருமனே பின்னர் எல்லா நோய்களுக்கும் காரணமாகி விடுகிறது. எனவே ஆண்கள் அப்பொழுது ஆரோக்கியமான சீரான உணவுகளை எடுப்பது அவசியம். அதே மாதிரி ஒரே நேரத்தில் நிறைய உணவுகளை சாப்பிடாமல் 5 வேளைகள் என்று சிறிது சிறிதாக சாப்பிட முற்படுங்கள். அதே மாதிரி உங்க உடல் எடையை கட்டுக்குள் வைக்க தவறாமல் உடற்பயிற்சி செய்து வாருங்கள். தொப்பை போன்றவை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சத்தான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான எடை ஆகியவற்றால் உங்க நீரிழிவு மற்றும் மூட்டு வலியைத் தவிர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

​புரோஸ்டேட் புற்றுநோய்

ஆண்களை தாக்கும் மற்றொரு மிகப்பெரிய ஆபத்து புரோஸ்டேட் புற்றுநோய் என்பதாகும். இது ஆணின் பிறப்புறுப்பில் அசாதாரண செல்களை உருவாக்கி புரோஸ்டேட் புற்றுநோயை உண்டாக்குகிறது. புரோஸ்டேட் சுரப்பி சிறுநீர்ப்பையின் கீழே அமைந்துள்ளது. இந்த சுரப்பியில் ஏற்படும் புற்றுநோயை ஆண்கள் ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து விட்டால் புற்றுநோய் கட்டிகள் மற்ற பாகங்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.

புற்றுநோயை கண்டறிய இரத்த பரிசோதனைகள் செய்யப்படுகிறது. புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஆண்கள் 60 மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உங்க புறப்புறுப்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். இதன் மூலம் குணப்படுத்த முடியும்.

​ஆண்மைக் குறைவு பிரச்சனைகள்

இது பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகும். புரோஸ்டேட் புற்று நோயால் புரோஸ்டேட் சுரப்பி நீக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள் போன்றவர்கள் ஆண்மைக் குறைவு பிரச்சினையை சந்திக்கின்றனர். மேலும் ஆண்களுக்கு இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவால் கூட ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆண்மைக்குறைவுக்கு ஆளாகக்கூடிய ஆண்களுக்கு இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 1.6 மடங்கு அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே உங்களுக்கு ஆண்மைக் குறைவு பிரச்சனைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. டாக்டர்களின் கூற்றுப்படி, ஆண்கள் தங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவைப் பற்றி அதிகம் பயப்படுகிறார்கள். குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவின் அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

​முடிவு

எனவே ஆண்கள் தங்களுக்கு வரும் நோய்கள் குறித்து விழிப்புணர்வோடு செயல்படுவது முதலில் முக்கியம். ஆண்கள் உடல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருந்தால், உடல் பருமன், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் முதுமையில் ஏற்படும் மறதி ஆகியவற்றைக் குறைக்கலாம். அதே மாதிரி உங்க இதய ஆரோக்கியத்தை பராமரியுங்கள். அதற்கு உங்க மன ஆரோக்கியமும் நன்றாக இருக்க வேண்டும். எனவே பயம், மன அழுத்தம் இவற்றை ஓரங்கட்டுங்கள். மேலும் உங்க உடல் நலத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைக்க தேவைப்படும் பரிசோதனைகளை செய்ய மறவாதீர்கள். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உங்களை நோய் நொடியில்லாமல் வாழ உதவி செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page