கேரளாவில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா

Spread the love

கேரளாவில் இன்று 12 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என முதல்மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்:

கேரளாவில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்ட 12 பேரும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆகும்.

6 பேர் மகாராஷ்டிராவில் இருந்தும், தமிழ்நாடு, குஜராத்தில் இருந்து தலா ஒருவரும் எஞ்சிய 4 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்தவர்கள் ஆவர். உள்மாநிலத்தில் இன்று புதிதாக யாருக்கு கொரோனா பரவவில்லை.

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் மொத்தம் 142 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page