உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராக மத்திய மந்திரி ஹர்சவர்தன் தேர்வு

Spread the love

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராக மத்திய மந்திரி ஹர்சவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மந்திரி ஹர்ஷ்வர்த்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ..நா.வின் உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, இந்த வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி ஹர்சவர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், வரும் 22-ம் தேதி பதவியேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு முழுநேர பணி அல்ல, நிர்வாக சபையின் கூட்டங்களுக்கு மந்திரி தேவைப்படுவார் என்று ஒரு அதிகாரி கூறினார்.

73 வது உலக சுகாதார மாநாட்டில் உரையாற்றிய ஹர்சவர்தன் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சரியான நேரத்தில் இந்தியா மேற்கொண்டதாக கூறினார்.

கொரோனா வைரசை கையாள்வதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்றும், வரும் மாதங்களில் சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page