சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீஜிங்,
கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் 24 மணி நேரத்துக்குள் புதிதாக 23 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 6 பேருக்கு மட்டுமே அறிகுறியுடன் நோய் தாக்கம் இருப்பதாகவும், மற்ற 17 பேருக்கு அறிகுறியின்றி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோய் அறிகுறியுடன் பாதிப்புக்கு உள்ளான 6 பேரின் ஒருவர் கொரோனா வைரஸ் தோன்றிய ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.