கொரோனா வைரஸ் நெருக்கடி சுமார் 6 கோடி மக்களை தீவிர வறுமையில் தள்ளும்-உலக வங்கி

Spread the love

கொரோனா வைரஸ் நெருக்கடி சுமார் 6 கோடி மக்களை தீவிர வறுமையில் தள்ளும் என்று உலக வங்கியின் தலைவர் கூறி உள்ளார்.

வாஷிங்டன்

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 300,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதனால் தொடர் ஊரடங்கால உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கின்றன

கொரோனா வைரஸ் நெருக்கடி சுமார் 6 கோடி மக்களை தீவிர வறுமையில் தள்ளும் என்று உலக வங்கியின் தலைவர் கூறி உள்ளார்.

உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் கூறியதாவது:-

உலகவங்கி ஏற்கனவே 100 நாடுகளில் உதவித் திட்டங்களுக்கு நிதியளித்து வருகிறது, அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டாலர் செலவழிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டின் கீழ் உள்ளோம். இது உலக மக்கள்தொகையில் 70 சதவீத மக்கள் வசிக்கும் இடம். இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் இது குறிக்கிறது

இந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் ஐந்து சதவீத சரிவை வங்கி எதிர்பார்க்கிறது. இது ஏழ்மையான நாடுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

எங்கள் மதிப்பீடு என்னவென்றால், மூன்று ஆண்டுகளில் 6 கோடி மக்கள் வரை வறுமையில் தள்ளப்படுவார்கள், வறுமை ஒழிப்பில் ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களையும் அழிக்கப்பட்டு உள்ளது. எங்கள் கணிப்புகள் ஆழ்ந்த மந்தநிலையைக் குறிக்கின்றன.

இதுவரை, உலக வங்கி 5.5 பில்லியன் டாலர்களை ஏழை நாடுகளில் உள்ள சிக்கலான சுகாதார அமைப்புகள், பொருளாதாரங்கள் மற்றும் சமூக சேவைகளை உயர்த்த செலவிட்டுள்ளது.

ஆனால் உலக வங்கியின் முயற்சிகள் மட்டும் போதுமானதாக இல்லை நீடித்த மீட்சியை உறுதி செய்வதற்காக ஏழை நாடுகளுக்கு இருதரப்பு உதவியை முடுக்கிவிடுமாறு நன்கொடை நாடுகளை வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page