கீழடியில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்

Spread the love

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

சிவகங்கை ,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை சென்னையில் இருந்தவாறு முதல்வர் பழனிசாமி கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து கீழடியில் அகழாய்வுப் பணிகளை தொல்லியலாளர்கள் மேற்கொண்டனர். கீழடியுடன் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளும் கூடுதலாக ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளன.

அதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமல்ப்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக கீழடியில் அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் கீழடியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக, தொல்லியல் துறை உதவி இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page