அரசு துறைகள், தனியார் தொழிற்சாலைகள் மாநகர போக்குவரத்து கழக பஸ் சேவை தேவையா? அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்

Spread the love

தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் கடந்த 18-ந்தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.

சென்னை

தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் கடந்த 18-ந்தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. அரசின் பல்வேறு துறைகள், தலைமைச் செயலகம் மற்றும் ஐகோர்ட்டு உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ளவர்கள் பணிக்கு வர ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 200 பஸ்கள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைமைச் செயலகத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க கேட்டு கொள்ளப்பட்டது. அதன்படி 25 பஸ்களும், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பள்ளி கல்வி இயக்குநரகம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளுக்காக 5 பஸ்கள் என ஆக மொத்தம் 230 பஸ்கள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருத்தணி, திருவள்ளூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக, 49 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் உள்ள மாநில, மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பஸ் வசதி தேவைப்படும் பட்சத்தில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின், தலைமையகப் பொது மேலாளர் (இயக்கம்) 94450-30504, துணை மேலாளர் (வணிகம்) 94450-30523 ஆகியோர்களை செல்போன் எண்ணிலும், edp.mtc@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம்.

அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள் பணியாளர்களுக்கு பஸ் வசதி தேவைப்படும் பட்சத்தில், அவர்களும் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டு உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page