உள்நாட்டு விமான பயணங்களுக்கான டிக்கெட் விலை ரூ.2,000 முதல் ரூ.18,600 வரை இருக்கும்

Spread the love

உள்நாட்டு விமான பயணங்களுக்கான 7 கட்டண விவரங்களை இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டு உள்ளது. டிக்கெட் விலை ரூ.2,000 முதல் ரூ.18,600 வரை இருக்கும்.

புதுடெல்லி

40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.2,000 மற்றும் ரூ.6,000 இருக்கும் என்று இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.

இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறி இருப்பதாவது:-

40 முதல் 60 நிமிடங்களுக்கு இடைப்பட்ட பயண விமானங்களுக்கு, குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டண வரம்பு ரூ .2,500 முதல் ரூ.7,500 வரை இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

60 முதல் 90 நிமிடங்களுக்கு இடையிலான விமானங்களின் டிக்கெட்டுகள் ரூ.3,000 முதல் 9,000 வரை இருக்கும்

டெல்லி-மும்பை வழியைப் போல 90 முதல் 120 நிமிடங்களுக்கு இடையேயான விமானங்களில் குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டண வரம்பு ரூ.3,500 முதல் ரூ.10,000 வரை இருக்கும்.

டெல்லி-பெங்களூரு வழியைப் போல 120 முதல் 150 நிமிடங்களுக்கு இடையேயான விமானங்களுக்கு குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டண வரம்பு ரூ.4,500 முதல் ரூ.13,000 வரை இருக்கும்.

டெல்லி-இம்பால் வழியைப் போல 150 முதல் 180 நிமிடங்களுக்கு இடையேயான விமானங்களில் குறைந்த மற்றும் அதிக கட்டண வரம்பு ரூ.5,500 முதல் ரூ.15,700 வரை இருக்கும்.

டெல்லி-கோயம்புத்தூர் வழியைப் போல 180 முதல் 210 நிமிடங்களுக்கு இடையேயான விமானங்கள் குறைந்த மற்றும் அதிக கட்டண வரம்பான ரூ .6,500 முதல் ரூ .18,600 வரை இருக்கும் என கூறி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page