சென்னையில் 3 மண்டலத்தில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Spread the love

சென்னை: சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 3 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனா பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் சென்னை மட்டுமே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நேற்று (மே 21) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 776 பேரில் சென்னையில் மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 8,795 ஆக அதிகரித்துள்ளது. இதில், 3,062 பேர் குணமடைந்துள்ளனர், 68 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்றைய பாதிப்புகளில் புதிய உச்சமாக ராயபுரத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ராயபுரம் மண்டலத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1,277 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் ராயபுரத்தில் தொற்று எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் விகிதம் 62.9 சதவீதமாகவும், உயிரிழப்புகள் விகிதம் 67.8 ஆகவும் உள்ளது. நேற்றைய பாதிப்புகளில் ராயபுரம் மண்டலத்தில் 161 பேரும், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டையில் தலா 57 பேரும், திரு.வி.க.நகரில் 56 பேரும், தண்டையார்பேட்டையில் 50 பேரும், கோடம்பாக்கம் 39 பேரும், வளசரவாக்கத்தில் 35 பேரும், அடையாறு 26 பேரும், அம்பத்தூரில் 24 பேரும், சோழிங்கநல்லூரில் 17 பேரும், மாதவரத்தில் 14 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மணலி மற்றும் திருவொற்றியூரில் தலா 7 பேரும், ஆலந்தூரில் 6 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டனர்.

சென்னையில் மண்டல வாரியாக மொத்த பாதிப்பு:

ராயபுரம் – 1,699
கோடம்பாக்கம் – 1,231
திரு.வி.க.நகர் – 1,032
தேனாம்பேட்டை – 926
தண்டையார்பேட்டை – 823
அண்ணாநகர் – 719
வளசரவாக்கம் – 605
அடையாறு – 472
அம்பத்தூர் – 376
திருவொற்றியூர் – 228
மாதவரம் – 186
சோழிங்கநல்லூர் – 130
மணலி – 115
பெருங்குடி – 112
ஆலந்தூர் – 96

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page