39-வது நினைவு தினம் அனுசரிப்பு சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

Spread the love

‘தினத்தந்தி’ நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 39-வது நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

‘தினத்தந்தி’ நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 39-வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

வர்த்தக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.பி., மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.அகமது அலி, மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சூளை ராஜேந்திரன், நிர்வாகிகள் எம்.ஜி.ராமசாமி, சக்தி கண்ணன், ஞானசேகரன், தணிகாசலம்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் அன்பு தென்னரசன், கதிர் ராஜேந்திரன், ஜெகதீஸ் பாண்டியன், புகழேந்தி.

ம.தி.மு.க. சார்பில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் கழககுமார், ஜீவன், சுப்பிரமணி, தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் பூங்கா நகர் ராமதாஸ்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சத்திரியன் வேணுகோபால், புதிய நீதி கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் சீனிவாசன்.

தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஏ.கணேசா, திருவொற்றியூர் நகர டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் டி.முல்லை ராஜா, சூளைமேடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற செயலாளர் அம்பலவேலன்.

சத்திரிய நாடார் இயக்க நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால், மாவட்ட தலைவர் காமராஜ், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார்.

மயிலை வியாபாரிகள் சங்க தலைவர் மயிலை சந்திரசேகரன்.

தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், வேல் ஆதித்தன், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக நிறுவன தலைவர் முத்துராமன் சிங்கப்பெருமாள், பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் எம்.வி.திருப்பதி.

ஜெ.தீபா பேரவை தலைமை நிலைய செயலாளர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, தமிழன்னை கலைமன்ற செயலாளர் ரவி உள்பட பலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாளையொட்டி வெளியிட்டுள்ள நினைவஞ்சலி செய்தியில் கூறியிருப்பதாவது:-

எளிய தமிழை எளிமையாக பதிப்பித்து செய்திகளை எளியோரும் விரும்பும் வண்ணம் எடுத்து சென்ற சாதனையாளர் ஐயா சி.பா.ஆதித்தனார். அனைத்து செய்திகளை அனைவருக்கும் எடுத்துச்செல்வதில் பெரும்பங்காற்றியவர், கடுமையான உழைப்பிற்கு உதாரணமாக திகழ்பவர் சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது நினைவை போற்றி எனது அஞ்சலியை சமர்ப்பிக்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்ப்பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கவுதமன், லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் நெல்லை ஜீவா ஆகியோர் புகழஞ்சலி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page