மும்பையில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டுசொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உதவ வேண்டும் தமிழக அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள்!
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவு வசிக்கும் பகுதியான தாராவியில் மக்கள்நெருக்கம் காரணமாக கொரோனா பரவல் தீவிரமாக காணப்படுவதால் மக்கள் அச்சத்தால் சொந்த ஊருக்கு திரும்ப போக்குவரத்து வசதியை எதிர்பார்த்துள்ளனர் .
தாராவில் சிகிச்சை பெறுவதற்கான போதிய மருத்துவ வசதி இல்லை எனவும் சமூக இடைவெளியை கடைப்பிக்காமல் மக்கள் நெருக்கமாக செல்வதால் நோய் பரவுதல் அதிகரிக்கிறது எனவும் உயிர்பிழைப்பதற்கு வழி செய்யுமாறு அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .தற்போதைய கொரோனா சூழல் மட்டுமன்றி எதிர்வரும் மழைக்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகி வசிப்பதற்கு ஏற்ற சூழல் இருக்காது என்ற நிலையில் ஊருக்கு திரும்ப விழைகின்றனர் .
அதுமட்டுமின்றி பெரும்பாலான தமிழர்கள் குடியிருப்புகளை காலி செய்து ஊர்களுக்கு திரும்புவதற்க்கு இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் போராட்டம் மேற்கொண்டுள்ளனர் .மேலும் பணிக்காக அங்கு சென்றவர்களை பிரிந்து தமிழகத்தில் வசிப்பவர்களும் அவர்களின் நிலையறிந்து தவிப்பிற்குள்ளாகி உள்ளனர் .
பிற நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை விமானத்தின் மூலம் மீட்டு வருவதை போல நம் நாட்டின் பிற மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் . எனவே தமிழக அரசு தாராவி உட்பட மும்பையில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அரசின் சுகாதார நிபந்தணைக்கு உட்பட்டு இரயில் மூலம் மீட்டு அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார் .