இந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை

Spread the love

கொழும்பு:
‘கொரோனா பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்கும் வகையில், 8,360 கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க வேண்டும்’ என, இந்தியாவுக்கு நம் அண்டை நாடான இலங்கை கோரிக்கை வைத்து உள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு பிரச்னைகளை சமாளிப்பது தொடர்பாக, இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சேவுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம், தொலைபேசியில் பேசினார். அப்போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். ஊரடங்கால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிக்க தேவையான உதவிகளை செய்வதாக, மோடி அப்போது உறுதி அளித்தார்.

இந்த பேச்சின் போது, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ‘கரன்சி ஸ்வாப் எனப்படும் செலாவணி பரிமாற்ற முறையின் கீழ், 8,360 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும்’ என, கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து, இலங்கை உயரதிகாரிகள் கூறியதாவது:’சார்க்’ எனப்படும் தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் மூலம், 3,040 கோடி ரூபாய் கடன் வழங்கும்படி, இந்தியாவிடம், இலங்கை ஏற்கனவே கேட்டுள்ளது. தற்போது, அதைத் தவிர கூடுதலாக, 8,360 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என, அவர் கேட்டுள்ளார்.

பொருளாதார சிக்கல்களால், நாட்டின் ரொக்க இருப்பு குறைந்து வருவதை சமாளிக்க இந்த உதவியை செய்யுமபடி, கோத்தபய கேட்டுள்ளார். இதைத் தவிர, இலங்கையில் நிறுத்தப்பட்ட துறைமுகப் பணிகளை, இந்தியா விரைவில் துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும், அவர் முன்வைத்தார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page