சினிமாவை மிஞ்சும் சம்பவம்…முறையற்ற காதல்… ஒரு கொலையை மறைக்க 9 பேர் கொலை…

Spread the love

சினிமாவை மிஞ்சும் சம்பவம் முறையற்ற காதலால் ஒரு கொலையை மறைக்க 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக போலீசார் வாலிபர் ஒருவரை கைது செய்து உள்ளனர்.

வாரங்கல்

தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் ஒன்பது பேரைக் கொன்ற வழக்கில் 24 வயது வாலிபர் ஒருவர் கைது செய்யபட்டார்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள கிணற்றில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல்கள் மற்றும் பீகாரைச் சேர்ந்த இருவர் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேரின் உடல்கள் மொத்தம் 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.9 உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லாததால் முதலில் தற்கொலை என கூறபட்டது.

மார்ச் மாதம் காணாமல் போன ஒரு பெண்ணின் கொலையை மறைக்க குற்றம் சாட்டப்பட்டவர் அவர்களைக் கொன்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மசூத் (வயது48) மற்றும் அவரது மனைவி நிஷா 20 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்திலிருந்து வாரங்கல் கிராமத்தில் குடியேறினர். அவரது குடும்பத்தினர் அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். மசூத்-நிஷா குடும்பத்திற்கு பீகாரை சேர்ந்த சஞ்சய் குமார் யாதவ் என்பவர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிஷாவின் அக்கா மகள் ரபிகா என்பவர் தனது 16 வயது மகள் மற்றம் இரண்டு மகன்களுடன் பிழைப்பு தேடி வாரங்கல் பகுதிக்கு வந்துள்ளார்.

சஞ்சய்க்கு உணவு சமைத்து கொடுக்க யாரும் இல்லை என்பதால், ரபிகா உணவு வழங்கி வந்துள்ளார். இதனிடையே ரபிகாவுக்கும் சஞ்சய்க்கும் காதல் மலர்ந்துள்ளது. ரபிகா தனது மூன்று பிள்ளைகளுடன் சஞ்சய்யை திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், சஞ்சய் ரபிக்காவின் 16 வயது மகள் மேல் கண் வைத்து அச்சிறுமியுடன் நெருக்கம் காட்டி வந்துள்ளான்.

இதை அறிந்து கொண்ட ரபிகா சஞ்சையை கடுமையாக கண்டித்துள்ளார். எனவே மார்ச் 7ஆம் தேதி ரபிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரெயில் நிலையம் அழைத்து சென்றுள்ளான்.

ரெயிலில் பயணிக்கும் போது இரவில் மோரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ரபிகாவைத் தூங்க வைத்து. அதிகாலை 3 மணி அளவில் துப்பட்டவை எடுத்து ரபிகாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளான்.

பின்அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கி மற்றொரு ரெயிலில் ஏறி வாரங்கலிற்கு வந்துள்ளான்.இந்நிலையில், சஞ்சய் திரும்பியதும், நிஷா ரபிகாவை எங்கே என்று விசாரித்துள்ளார். அதற்கு பீகாரில் உள்ள தனது வீட்டிற்கு ரபிகா சென்றுள்ளதாக சஞ்சய் தெரிவித்துள்ளான்.

ஆனால் நிஷாவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர், மீண்டும் சஞ்சயிடம் உண்மையை கூறவில்லை என்றால் போலீசில் புகார் தெரிவிப்பேன் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் மசூத் -நிஷாவின் தம்பதியின் மூத்த மகனுக்கு கடந்த 21ஆம் திகதி பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இஅதிஅறிந்து கொண்ட சஞ்சய் அதில், கலந்து கொண்டு அனைவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளான்.

அவன் திட்டபடி, தூக்கமாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்துள்ளான். விருந்தில் அங்கு பணிபுரியும் பீகாரை சேர்ந்த 3 இளைஞர்கள் உட்பட 9 பேர் அந்த குளிர்பானத்தை குடித்து மயங்கியுள்ளனர்.இரவு 12:30மணிக்கு அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில், சஞ்சய் தனியாளாக ஒவ்வொரு வரையாக கோணிப் பையில் வைத்து கட்டி அருகில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளான். பின் சிசிடிவி கேமிரா காட்சி மூலம் சஞ்சய் சிக்கி கொண்டான்.ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page