இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
கொழும்பு,
இலங்கை அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டைமான் மரணமடைந்தார். 55-வயதான அவர், உடல் நலக்குறைவால் கொழும்புவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இலங்கையின் தற்போதய அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஆறுமுகன் தொண்டைமான் இருந்தார்.