கொரோனா பாதிப்பு இளம் தொழிலாளர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, பெண்கள் ஆண்களை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறி உள்ளது.
ஜெனீவா:
கொரோனா தொற்றுநோய் பரவ தொடங்கியதில் இருந்து உலக அளவில் இளைஞர்களில் ஆறில் ஒருவர் வேலையில்லாமல் இருப்பதாகவும், அதே நேரத்தில் பணியில் இருப்பவர்கள் 23 சதவீதம் குறைவாக வேலை செய்கின்றனர் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறி உள்ளது.
தொற்றுநோயால் இளைஞர்கள் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பிப்ரவரி மாதம் முதலே, இளைஞர்களுக்கு வேலையின்மை என்பது கணிசமாகவும் விரைவாகவும் அதிகரித்து வந்துள்ளது. மேலும் இது இளைஞர்களை விட அதிகமாக இளம் பெண்களை பாதித்துள்ளது.
இது குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு இயக்குனர் ஜெனரல் கை ரைடர் கூறினார்.
2019 ல் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 13.6 சதவீதமாக இருந்தது. இது வேறு எந்த பிரிவையும் விட அதிகமானது. உலகளவில் வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சியில் ஈடுபடாத சுமார் 267 லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள்.
“அவர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கு நாம் குறிப்பிடத்தக்க மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்காமல் ஓரங்கட்டப்பட்டால், அது நம் எதிர்காலத்தை சேதப்படுத்தும், மேலும் கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதாரத்தை மீண்டும் சிறப்பானதாக உருவாக்குவது மிகவும் கடினம்.”
வளர்ந்த நாடுகளில் பரந்த நிலையிலான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி உத்தரவாத திட்டங்கள், குறைந்த மற்றும் நடுத்தர வருமான பொருளாதார பிரிவுகளில் வேலைவாய்ப்பு தரும் தீவிரமான முக்கிய திட்டங்கள் மற்றும் உத்தரவாதங்கள் போன்றவை அவசியம் என்று கூறியுள்ளார்.