மோடி தாய்க்கு எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு

Spread the love

புதுடில்லி:

பிரதமர் மோடி தனது தாய்க்கு எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.

இது குறித்து ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் தெரிவித்து இருப்பதாவது:

பிரதமர் மோடி தனது தாய் ஹீரா பென்னுக்கு பல்வேறு தலைப்புகளில் கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதங்கள் அனைத்தும் 1986 ஆண்டிற்கு முந்தையவை. பிரதமர் மோடி ஒரு இளைஞனாக ஒவ்வொரு நாளும் தனது தாய்க்கு கடிதம் எழுதும் வழக்கத்தை கொண்டிருந்தார். அதில் சந்தோஷங்கள், நீடித்த நினைவுகள், துக்கங்கள் இருந்தன. அவர் எழுதிய கடிதங்கள் பலவற்றில் தற்போது உள்ளவை ஆங்கிலத்தில் கிடைக்க இருக்கின்றன.
குஜராத் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் பிரபல திரைப்பட விமர்சகர் பவானா சோமயா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியாகிறது. என அந் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page