ஊரடங்கு முடிந்து 6 மாதம்வரை பொது போக்குவரத்து பயன்பாடு குறையும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி மற்றும் அதைச்சுற்றியுள்ள நகரங்களில் பொது போக்குவரத்து பயன்பாடு குறித்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், ஊரடங்கு முடிவடைந்து 6 மாத காலம்வரை பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை பொதுமக்கள் குறைத்துக் கொள்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. மெட்ரோ ரெயில் பயணம், 37 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக குறையும்.
ஆனால், கார், இருசக்கர வாகன பயன்பாடு 28 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அதிகரிக்கும். சொந்த வாகனங்களில் பயணிப்பதையே மக்கள் விரும்புகின்றனர் என்றும், தங்கள் ஆரோக்கியத்துக்கே முன்னுரிமை அளிக்கின்றனர் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.