இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 4971ஆக உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்ந்துள்ளன, இதில் 86,422 செயலில் உள்ள பாதிப்புகள், 82,369 பேர் குணமாகி உள்ளனர். 4,971 இறப்புகள் இறப்புகள் பதிவாகி உள்ளன என கூறப்பட்டு உள்ளது.
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,437 கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. மும்பையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 36,710 ஆக உயர்ந்துள்ளது, 38 புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 1,173 ஐ எட்டியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 192 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தூர் மாவட்டத்தில் 84 பாதிப்புகள் பதிவாகி உள்ளது. மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை இப்போது 7,645. ஆக உயர்ந்து உள்ளது.