சென்னையில் 1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Spread the love

1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை

சென்னை புளியந்தோப்பில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த பின் சுகாதாரஅமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது. சிசிடிவி கேமரா மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும். சிகிச்சை மையத்தில், சிறப்பு மருத்துவ குழு முழுநேரமும் செயல்படும்.

சென்னையில் கொரோனா சிகிச்சையில் தாமதம் ஏற்படாமல் இருக்க கூடுதலாக 10 இடங்களில் பரிசோதனை செய்யப்படும். காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சென்னையில் 140 நகர்ப்புற சுகாதார மையங்களில் பரிசோதனை நடத்தப்படும். சமூக பரவல் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page