முல்லைப் பெரியாறு அணைக்கு கூடுதல் நீர்வரத்து

Spread the love

2-வது நாளாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணையின் நீர் மட்டம் 112.80 அடியாக உள்ளது. 125 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மழை இல்லாததால் அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் திடீரென மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

இதனால் நீர் வரத்தின்றி காணப்பட்ட முல்லைப் பெரியாறு அணைக்கு 311 கன அடி நீர் வந்தது. இன்று காலை அது 498 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 112.80 அடியாக உள்ளது. 125 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர் மட்டம் 38.65 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 36.85 அடியாக உள்ளது. நீர் வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 62.64 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page