அமெரிக்காவில் சீன மாணவர்கள் வருகைக்கு டிரம்ப் தடை விதித்துள்ளார்.
வாஷிங்டன்,
குறிப்பிட்ட சீன மாணவர்கள் மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் வருகைக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சீனா தனது நாட்டின் முதுகலை மாணவர்கள் மற்றும் முதுகலை ஆராய்ச்சியாளர்களை அறிவு சொத்து திருடர்களாக பயன்படுத்துகிறது. அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி, அறிவுசார் சொத்துகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை திருடி, தனது ராணுவத்தை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆகவே, சீன ராணுவத்துடன் தொடர்புடைய சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் வருகைக்கு தடைவிதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.