தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு

Spread the love

மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

சென்னை

இன்றுடன் 4-வது கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுடன் நீட்டிப்பை அறிவித்து உள்ளது.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு

பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு

ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை

மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு

ஜூன் 1 முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கும்

அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி

சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள், பெரிய கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி

சலூன் கடை, அழகு நிலைய கடைகள் ஏசி வசதியை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதி

ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் வரை பயணம் செய்ய அனுமதி

திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார், கூட்ட அரங்குகளை திறக்க தடை

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்

ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி

வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்

50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி

ஜூன் 30 வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு

கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை தொடரலாம்; அதனை ஊக்கப்படுத்தலாம்

மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30ஆம் தேதி வரை தடை விதிப்பு

வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்

நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை… திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும்

மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page