இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,763 லிருந்து 1,82,143 ஆக அதிகரித்து உள்ளது உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,971 லிருந்து 5,164 ஆக உயர்ந்து உள்ளது.
193 நோயாளிகள் நேற்று இறந்த பின்னர், தொற்று நோயுடன் தொடர்புடைய மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370 லிருந்து 86,984 ஆக உயர்ந்து உள்ளது என கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 8,000 ஐத் தாண்டியது இதுவே முதல் முறை.
மராட்டியத்தில் மொத்தம் 65,168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது கொரோனாவில் இருந்து 28,081 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,197 பேர் உயிரிழந்துள்ளனர்.