நேபாள நாடாளுமன்றம் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்ற்கு ஒப்புதல் அளிக்க உள்ளது
புதுடெல்லி:
நேபாளத்தின் புதிய வரைபடத்தை புதுப்பிப்பதற்கான ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதாவை நேபாளத்தின் ஆளும் இடது கூட்டணி நேபாள நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக எதிர்க்கட்சி நேபாளி காங்கிரஸ் கூறியுள்ளது. பெரும்பான்மை கிடைக்கும் என்பதால் இந்த மசோதா வெற்றி பெரும்.
இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகள் அடங்கிய புதிய நேபாள வரைபடத்தை ஆளும் கட்சி வெளியிட்டது.இந்திய பிராந்தியங்களான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த வரைபடத்தை நில மேலாண்மை, கூட்டுறவு மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம் வெளியிட்டது.
சீனாவின் எல்லையைத் தொடும் பிரதேசத்தை நேபாளம் பிரிட்டிஷ் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியுடன் செய்த ஒப்பந்தத்தின் கீழ் உரிமை
இப்பகுதியில் உத்தரகண்டில் உள்ள லிபுலேக் பாஸ் மற்றும் லிம்பியாதுரா மற்றும் கலாபானி ஆகியவை அடங்கும், அவை 1962 ஆம் ஆண்டு சீனாவுடனான போருக்குப் பின்னர் இந்தியா பாதுகாத்து வரும் மிகவும் முக்கிய பகுதிகள் ஆகும்.
மே 8 ஆம் தேதி, சீனாவில் கைலாஷ் மன்சரோவர் வழித்தடத்துடன் லிபுலேக் பாஸை இணைக்கும் புதிய சாலையை இந்தியா திறந்தவுடன் இந்த வரைபடம் குறித்த சர்ச்சை எழுந்தது. நேபாளம் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் பாதுகாப்பை ஏற்படுத்த விரும்புவதாகக் கூறியது. முற்றிலும் இந்தியாவின் எல்லைக்குள் உள்ளது “மற்றும் யாத்ரீகர்கள் இந்த வழியை பயன்படுத்துகிறார்கள்.
இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய நேபாள பிரதமர் கே.பி. ஒளி நாட்டின் புதிய வரைபடங்கள் வெளியிடப்படும், அது தனது சொந்தமாகக் கருதும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி கூறுகையில், “லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலாபானி ஆகிய பகுதிகள் நேபாளத்தின் பகுதிகளாகும், மேலும் இந்த பிரதேசங்களை மீட்பதற்கு உறுதியான இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நேபாளத்தின் அனைத்து பகுதிகளையும் இணைத்து அதன்படி நேபாளத்தின் அதிகாரப்பூர்வ வரைபடம் வெளியிடப்படும்எ ன கூறினார்
இதற்கு இந்தியாவில் இருந்து கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது இந்த நடவடிக்கை “ஒருதலைப்பட்சமானது” என்றும் வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும் குற்றம்சாட்டியது.
“இத்தகைய பிராந்திய உரிமைகோரல்களை செயற்கையாக விரிவுபடுத்துவது இந்தியா ஏற்றுக்கொள்ளாது” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். “இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை நேபாளம் நன்கு அறிந்திருக்கிறது, இதுபோன்ற நியாயப்படுத்தப்படாத வரைபடக் கூற்றிலிருந்து விலகி, இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க நேபாள அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறி இருந்தார்.