பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் என்னென்ன..? தமிழக அரசு விளக்கம்

Spread the love

பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் என்னென்ன குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும்.

பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் குறித்து தமிழக அரசு வெளியீடு:

* பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநரின் உடல் வெப்பநிலையை சோதிக்க வேண்டும்

* ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கு ஒரு பாட்டில் கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும்; முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

* குளிர்சாதன பேருந்துகளில் ஏசி பயன்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும்.

* பேருந்தின் பின்படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

* பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* ஒவ்வொரு முறை பேருந்து பயணம் முடியும்போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* குளிர்சாதன பேருந்துகளில் ஏசி பயன்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும்.

* நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.

* தனியார் பேருந்துகளில் கட்டணம் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும்.

* மண்டலங்களுக்கு உள்ளேயே மட்டுமே பேருந்து இயக்கப்படும்.

* ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்தின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும்.

* மண்டலம் விட்டு மண்டலங்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் அவசியம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page