சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்குகிறது

Spread the love

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

சிங்கப்பூர்,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா சிங்கப்பூரையும் விட்டுவைக்கவில்லை. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 518 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 3 பேர் மட்டுமே சிங்கப்பூர்வாசிகள். மற்ற அனைவரும் அங்கு தங்கி வேலை பார்த்து வரும் வெளிநாடுவாழ் மக்கள்.இதன்மூலம் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,884 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து கடந்த மே மாதத்தில் இருந்து அங்கு வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page