கொரோனா தொற்று பலவீனமடைந்து வருகிறது: இத்தாலி டாக்டர் தகவல்

Spread the love

ரோம்:
புதிய கொரோனா வைரஸ் தன்னுடைய ஆற்றலை இழந்து வருகிறது. இனி கொரோனாவால் ஆபத்து குறைவு தான் என இத்தாலியை சேர்ந்த சீனியர் டாக்டர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்பை சந்திக்க நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2,32,997 பேர் பாதிக்கபட்டுள்ளனர். 33,415 பேர்உயிரிழந்துள்ளனர். 1,57,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மே மாதத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்தபோதும் சில கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகிறது. லோம்பார்டி அடுத்த மிலனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வரும் சான் ரஃபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜாங்க்ரிலோ, டிவி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உண்மையில், கொரோனா வைரஸ் மருத்துவ ரீதியாக இனி இத்தாலியில் இல்லை. ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன் துணியில் எடுக்கப்பட்ட தொற்று மாதிரிகளோடு ஒப்பிடுகையில், கடந்த 10 நாட்களாக துணியில் எடுக்கப்படும் மாதிரிகளில், வைரஸ் தொற்று, எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட முடியாத அளவில் இருந்தது. சில நிபுணர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளனர். எனவே அரசியல்வாதிகள், புதிய எதார்த்த நிலையை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. நாம் ஒரு சாதாரண நாடாக திரும்ப வேண்டும். நாட்டை அச்சுறுத்துவதற்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும்.

அரசு எச்சரிக்கையுடன், விரைவில் கொரோனாவில் இருந்து வெற்றி பெறுவோம் என கூறுகிறது. கொரோனா தொற்று மறைந்துவிட்டது என்ற ஆய்வறிக்கையை ஆதரிக்க அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் நிலுவையில் உள்ளது. எனவே இத்தாலியர்களை குழப்பாத வகையில் உறுதியாக கூற முடியுமென்பவர்களை அழைக்கிறேன் என இத்தாலிய சுகாதாரத்துறை துணை செயலரான சாண்ட்ரா ஜம்பா தனது அறிக்கையில் கூறியிருந்தார். அதற்கு பதிலாக இத்தாலியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், உடல் ரீதியான இடைவெளியை பின்பற்றவும், கூட்டம் கூடுவதையும், அடிக்கடி கைகளை கழுவுவதையும், முகக்கவசம் அணியவும் அழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்றைய கொரோனா வித்தியாசமானது

\
கொரோனா வைரஸ் தொற்று பலவீனமடைந்து வருவதை கவனித்து வருவதாக அன்சா செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் மற்றொரு டாக்டர் ஒருவர் கூறியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன் இருந்த கொரோனாவின் பலமும்,இன்றைக்கு இருக்கும் கொரோனாவில் பலமும் ஒன்று அல்ல என ஜெனோவா சான் மார்டினோ மருத்துவமனை தொற்று நோய்கள் பிரிவு தலைவரான மேட்டியோ பாசெட்டி கூறியுள்ளார். இதன் மூலம் இன்றைய கொரோனா தொற்று வித்தியாசமானது என தெளிவாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page