வாஷிங்டன்
கொரோனா பலியை கட்டுப்படுத்துவதில் இந்தியா சூப்பர் என பிரபல இதய டாக்டர் இந்திரநில் பாசு ராய் என்ற தெரிவித்துள்ளார்.
உலகில் 3 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கிய கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக, அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, இந்திரநில் பாசு ராய் என்ற பிரபல இதய நோய் டாக்டர் தெரிவித்துள்ளார். மேலும், தக்க தருணத்தில் ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனாவால் ஏற்படும் பலியை இந்தியா வெகுவாக குறைத்திருப்பது பாராட்டுக்குரியது எனவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் ராய் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கொலம்பியா பல்கலை., நடத்திய ஆய்வில், ஊரடங்கை விரைந்து அமல்படுத்திய நாடுகளில், கொரோனா பலி, குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என சுட்டிக் காட்டியுள்ளார்.