வாஷிங்டன்
‘தன் ஊழல் நடவடிக்கைகளை நிறுத்தி, சீனாவின் தயவிலிருப்பதை நிறுத்தினால், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது குறித்து ஆராயப்படும்’ என, அமெரிக்கா கூறியுள்ளது.
‘கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம்; உலக சுகாதார அமைப்பு, அதற்கு ஆதரவாக செயல்படுவதால், அதிலிருந்து வெளியேறுகிறோம்’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியையும் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராபர்ட் ஓபிரையன் கூறியுள்ளதாவது: உலக சுகாதார அமைப்பு சரியாக செயல்படவில்லை. ஆப்ரிக்காவில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணத்தை அது வழங்கவில்லை. தேவைப்படுவோருக்கு இனி நேரடியாக உதவுவோம்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள, ஊழல் மலிந்துள்ள அமைப்பை நாங்கள் இனி நம்பமாட்டோம். ஒருவேளை, தன் ஊழல் நடவடிக்கைகளை கைவிட்டு, சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி வந்தால், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது குறித்து ஆராய்வோம். இவ்வாறு, அவர்கூறினார்.