தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் அருகே அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நேற்று காலை பல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.