கொரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்து – மீண்டும் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

Spread the love

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்து – மீண்டும் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

ஜெனீவா:

கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில் மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை நல்ல பலனை அளித்ததாக தகவல் வெளியானது. இதே கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

மலேரியா தடுப்பு மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது. இதையடுத்து இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை இறக்குமதி செய்தது. உலக அளவில் அந்த மாத்திரை தேவை அதிகரித்தது.

இதற்கிடையே, மலேரியா தடுப்பு மாத்திரை கொரோனா சிகிச்சையில் பலனளிக்கவில்லை. மேலும் சில ஆய்வுகளிலும் மலேரியா தடுப்பு மாத்திரை பலன் அளிக்கவில்லை என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

தி லான் கேட் மருத்துவ ஆய்வுகள் வெளியிட்ட ஆய்வறிக்கையில், கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை பாதுகாப்பானது அல்ல. இதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தது. மேலும் வெண்டிலேட்டரை பயன்படுத்த வேண்டிய தேவையை குறைக்கவில்லை. இதனால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது எனக் கூறியுள்ளது.

இதையடுத்து, கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்துவது பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

இந்நிலையில், ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற மலேரியா மருந்தை கொரோனாவுக்கு எதிராக மருத்துவ பரிசோதனைகள் செய்ய உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page