வெளிநாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க சீனா திட்டம் ;அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி

Spread the love

வெளிநாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க சீனா திட்டமிட்டு உள்ளது அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பெய்ஜிங்,

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வெளிநாட்டு விமான போக்குவரத்தை தொடங்க மீண்டும் அனுமதிக்கப்படுவதாகவும், அமெரிக்க விமானங்களுக்கு உண்மையான தடையை நீக்குவதாகவும் சீனா இன்று அறிவித்துள்ளது.

உலகின் இரு வல்லரசுகளுக்கிடையில் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுநோய், ஹாங்காங் விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சீனா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இந்த தொடர்ச்சியான பிரச்சினைகளால் சீனாவிடம் இருந்து விலகுவதற்கான வெளிப்படையான முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன, சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹவாய் மீதும் அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், அமெரிக்க நிதிச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

நேற்று அமெரிக்கா ஜூன் 16 முதல் சீன பயணிகள் விமானங்களுக்கு தடை விதிப்பதாக கூறியது.

இந்த நிலையில் ஆனால் மார்ச் 12 அட்டவணையில் பட்டியலிடப்படாத அனைத்து வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இப்போது ஒவ்வொரு வாரமும் சீனாவிற்கு ஒரு சர்வதேச வழியை இயக்க முடியும் என்று சீனாவிமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.

அதே நேரத்தில், நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தோன்றுவதால், சீனா சில வெளிநாட்டு நிறுவனங்களின் மீது கடுமையான விமான பயண கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தியுள்ளது.

சிங்கப்பூர், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வணிகப் பயணிகளுக்காக சீனாவும் விரைவான நுழைவு நடைமுறைகளை அமைத்துள்ளது.சீனா வந்ததும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

தொடர்ச்சியாக மூன்று வாரங்களுக்கு பயணிகள் அனைவரும் சோதிக்கப்படுவார்கள்.பாதிப்பு இல்லாத பட்சத்தில் அந்த பாதைகள் வழியாக ஒவ்வொரு வாரமும் கூடுதல் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படும் என்று சீனா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா பாதிப்பு பயணிகளைக் கொண்ட பாதைகள் குறைந்தது ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page