பிரதமரின் தனி செயலருக்கு உலக வங்கி பணி வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,
பிரதமரின் தனி செயலாளர் ராஜீவ் டோப்னோ, வாஷிங்டனில் உலக வங்கி செயல் இயக்குனரின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகள் இப்பணியில் இருப்பார்.
இதற்கான உத்தரவை பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. ராஜீவ் டோப்னோ, 1996-ம் ஆண்டின் குஜராத் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.