பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை – மம்தா பானர்ஜி

Spread the love

பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிகழ்ச்சியொன்றில் பேசியதாவது:-

நாங்கள் கொரோனா மற்றும் அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு கொண்டு வருவதில் போராடி வருகிறோம். சில அரசியல் கட்சிகள் எங்களை அகற்றுமாறு கேட்கின்றன.

பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.

நாங்கள் தரையில் இறங்கி வேலை செய்து கொண்டிருகிறோம். அரசியலில் ஈடுபடுவதற்கான நேரம் இதுதானா? கடந்த மூன்று மாதங்களாக அவர்கள் எங்கே இருந்தார்கள்? கொரோனா மற்றும் சதி ஆகிய இரண்டிற்கும் எதிராகமேற்கு வங்க அரசு நிச்சயம் வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page