சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் நியமனம்

Spread the love

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட சிறப்பு குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

சென்னை,

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், உதயகுமார், எம்.ஆர்,விஜயபாஸ்கர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

* மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

* அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

* தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

*அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், ஆகிய மண்டலங்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page