டிரம்ப் வெளியிட்ட ஜார்ஜ் புளாயிட் குறித்த வீடியோவை காப்புரிமை சட்டப்படி டுவிட்டர் நிறுவனம் அதனை நீக்கி உள்ளது.

வாஷிங்டன்,
டுவிட்டர் வலைதளம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட ஜார்ஜ் புளாயிட் குறித்த வீடியோவை காப்புரிமை சட்டப்படி நீக்கி உள்ளது. இந்த வீடியோவில் ஜார்ஜ் புளாயிட் படுகொலையை அடுத்து நடந்த போராட்டங்கள், நிகழ்வுகள் உள்ளிட்டவை தொகுக்கப்பட்டன.
மூன்றரை நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவுக்கு டிரம்ப் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இந்த வீடியோ ஏற்கனவே மற்றொருவரால் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது ஆகும்.
எனவே அவர் காப்புரிமைச் சட்டப்படி கோரியதால் இந்த வீடியோ டிரம்பின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. முன்னதாக டிரம்பின் கருப்பர்கள் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான சட்டப்பாதுகாப்பை பறிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்துயிட்டது குறிப்பிடத்தக்கது.