கொரோனா நெருக்கடி: இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம்

Spread the love

கொரோனா நெருக்கடி தொடர்பாக இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடைதம் எழுதி உள்ளன.

புதுடெல்லி

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தவறான தகவல்களைக் கையாள்வதில் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது தொடர்பாக ஆசியாவில் 12 நாடுகளை ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் மைக்கேல் பேச்லெட் விமர்சித்ததோடு அந்த முடிவை அடைவதற்குத் தேவையான குறைந்தபட்ச ஊடுருவும் அணுகுமுறையை எடுக்கவும் அவர்களுக்கு பரிந்துரைத்தார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் (OHCHR) இப்பகுதியில் உள்ள நாடுகளைப் பற்றி கோபத்தை ஏற்படுத்தியது இது முதல் தடவை அல்ல.

இஅதை உலகம் முழுவதும் நடந்து வரும் கொரோனா வைரஸ் நோய் நெருக்கடிக்கு மத்தியில் ஒரு பொறுப்பான பங்களிப்பை செய்யுமாறு இந்தியா மற்றும் இந்தோனேசியா தலைமையிலான எட்டு நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உள்ள மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்திற்கு (OHCHR)ஒரு கடிதம் எழுதியுள்ளன.

இந்தியா, இந்தோனேசியா, கம்போடியா, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மற்றும் வியட்நாம் ஆகியவை ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளுக்கு உயர் ஆணையர் அலுவலகத்திற்கு இந்த கடிதத்தை எழுதி உள்ளன.

கடிதத்தில் முன்னெப்போதும் இல்லாதா வகையில் உலகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. நமது அரசாங்கங்களின் முதன்மை கவனம் விலைமதிப்பற்ற உயிர்கள், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை, கொரோனாவால் இழக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகும். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகம் இதை அங்கீகரித்து பொறுப்பான பங்கை வகிக்க வேண்டும்.

கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பின் உலக சுகாதார சட்டமன்றக் கூட்டத்தின் ஒருமித்த தீர்மானத்தை நினைவு கூர்ந்து, உறுப்பு நாடுகள் “மக்களுக்கு நம்பகமான மற்றும் விரிவான தகவல்களை வழங்க வேண்டும் … தகவல் மற்றும் தவறான தகவல்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page