
புதுடில்லி
கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று சுற்றுலாத் துறை. ஹோட்டல், ரெஸ்ட்டாரெண்ட், டூர் பேருந்துகள் அதிகமாக பாதிக்கப்பட்டன.
கொரோனா பாதிப்புக்குப் பின்னர் இனி சுற்றுலா என்பதை மறந்துவிடவேண்டியதுதான் என பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பாதுகாப்பான உபகரணக்கள், முகக் கவசத்தோடு சுற்றுலா செல்வது தற்போதும் சாத்தியம். எப்படி என கேட்கிறீர்களா?
இந்திய வெளியிறவுத்துறை தற்போது சுற்றுலாவுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஜூன் 30 வரை தற்காலிகமாக இந்திய சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் உள்நாட்டு விமானங்கள் சுற்றுலாவுக்காகத் திறக்கப்பட்டுள்ளன.
தெர்மல் ஸ்கேனிங் எனப்படும் உடல் வெப்ப சோதனையை விமான நிலையங்களில் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆரோக்கிய சேது செயலியை கட்டாயமாக பயணிகள் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும்.
கொரோனா பாதித்த பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை. விமான நிலையத்தில் ஒரு ஹேண்ட் பேகேஜ் மற்றும் ஒரு செக் இன் பேகேஜ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இது தவிர லாப்-டாப் பேக் ஒன்றையும் எடுத்துச் செல்லலாம்.
விமானத்தில் உணவுகள் வழங்கப்படமாட்டாது. பதப்படுத்தப்பட்ட உலர் உணவுகளை கையில் எடுத்துச் செல்ல பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு தொடர்பு விமானத்துக்கு விமான நிலையத்தில் காத்திருப்பவர்களுக்கு திண்பண்டங்கள், டீ, காபி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக வீல் சேர்கள் சேவைக்கு அனுமதி உள்ளது. இவை கட்டாயமாக சுத்தப்படுத்தப்படவேண்டும்.