பாகிஸ்தானில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கொரோனா தொற்று பரவல் வேகம் காட்டி வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 4,728 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் அங்கு கொரோனா தாக்குதலுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து 1 லட்சத்து 3 ஆயிரத்து 671 என்ற எண்ணிக்கையை அடைந்தது.
24 மணி நேரத்தில் 65 பேர் உயிரிழந்ததின் மூலம் மொத்த உயிர்ப்பலி 2,067 ஆக அதிகரித்தது.
பஞ்சாப் மாகாணத்தில் அதிகபட்சமாக 38 ஆயிரத்து 108 பேருக்கும், கைபர் பக்துங்வா மாகாணத்தில் 13 ஆயிரத்து 487 பேருக்கும், பலுசிஸ்தானில் 6,516 பேருக்கும் தொற்று உள்ளது. இஸ்லாமாபாத்தில் 5,329 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. பாகிஸ்தானில் இதுவரை 7 லட்சத்து 5 ஆயிரத்து 833 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது.