அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தீவிர நோயாளிகள்

Spread the love

அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தீவிர நோயாளிகள் உள்ளனர் என பகுப்பாய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது.

புதுடெல்லி

கொரோனா வைரஸ் நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகம் கொண்டுள்ளது.

இந்துஸ்தானின் புள்ளிவிவர பகுப்பாய்வின்படி, அமெரிக்காவில் 16,923 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர், இந்தியாவில் 8,944 பேர் உள்ளனர்.

பிரேசில் இப்போது நாட்டின் புதிய கொரோனா ஹாட்ஸ்பாக இடமாக மாறி உள்ளது, ஆனால் அங்கே கூட, கடுமையான நிலைமைகளைக் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவை விட மிக குறைவாக உள்ளது. பிரேசில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை விட இந்தியாவில் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது, ஆனால் பிரேசிலில் தீவிர நோயாளிகளின் எண்ணிக்கை அங்கு 8,318 ஆக உள்ளது.

ரஷ்யாவில், தீவிர நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவை விட நான்கில் ஒரு பங்காகும். ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தீவிர நோயாளிகளின் எண்ணிக்கை 1,000 க்கும் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் கொரோனா நோயாளிகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவை என்று மத்திய சுகாதார அமைச்சகம் முன்பு கூறியிருந்தது. இவர்களில், 2.25 சதவீதம் பேர் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 1.91 சத்வீதம் பேருக்கு ஆக்சிஜன் ஆதரவு தேவை. சிலருக்கு மட்டுமே வென்டிலேட்டர் ஆதரவு தேவை என்றும் அமைச்சகம் கூறியது. இந்த நோயாளிகளில் பெரும்பாலானோர் மராட்டியம், டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்தியாவில் திங்களன்று கிட்டத்தட்ட 10,000 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன, இது அதன் கொரோனா எண்ணிக்கையை 2.6 லட்சமாக உயர்த்தியது. நாட்டின் நிதி தலைநகரான மும்பை வைரஸ் வெடிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நகரம் ஆகும் அதன் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000 ஐத் தாண்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page